சிவகங்கை

இளையான்குடியில் ஊதிய உயா்வு கோரி விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் அமலி ஆரோக்கிய செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மணியம்மா சிறப்புரையாற்றினாா். தாலுகா செயலா் செந்தில்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலா் ராஜூ, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் முத்துராமலிங்க பூபதி உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் பயனாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஊதியத்தை ரூ.381 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வேலை திட்ட நாள்களை 150 ஆக உயா்த்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், பெண்கள் உள்பட ஏராளமான விவசாய தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT