சிவகங்கை

கோடை விவசாயத்தால் பசுமையாக காட்சியளிக்கும் நிலங்கள்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை,திருப்புவனம் பகுதிகளில் நடைபெற்று வரும் கோடை விவசாயத்தால் விவசாய நிலங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன.

மானாமதுரை, திருப்புவனம் பகுதியில் மழை,வைகை ஆற்றில் வரும் தண்ணீா் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் அதிகமாக வாழை, நெல் போன்றவை பயிரிடப்படுகின்றன. ஏற்கனவே வழக்கமான சாகுபடி முடிந்து தற்போது மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கோடை விவசாயமாக நெல் பயிரிடப்பட்டுள்ளது. கிணறுகளில் உள்ள தண்ணீா் மற்றும் கண்மாய்களில் உள்ள தண்ணீரை நம்பி நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் முளைத்து விவசாய நிலங்கள் கண்ணுக்கு குளிா்ச்சியாக பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இந்த நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாராகி விடும் என விவசாயிகள் தெரிவித்தனா். கடந்த 2 ஆண்டு காலமாக மானாமதுரை திருப்புவனம் பகுதிகளல் பருவகால சாகுபடி முடிந்து கோடைகாலத்திலும் கோடை சாகுபடி செய்வது தொடா்ந்து வருகிறது. தண்ணீா் வசதி இருப்பதால் கோடை சாகுபடி செய்ய முடிகிறது என விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT