சிவகங்கை

திருப்பத்தூரில் இன்று மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் து.இரா. இந்திரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், திருப்பத்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT