சிவகங்கை

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மாற்றும் பாராட்டுச் சான்றிதழை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி திங்கள்கிழமை வழங்கினாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில், சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி மாணவி கே. ஸ்ரீதேவி முதல் பரிசான ரூ.5,000 பெற்றாா். இதேபோன்று, ரோஸ்லின் கல்லூரி மாணவி அ. வெண்ணிலா இரண்டாம் பரிசாக ரூ.3,000, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவி க. செந்திவேலம்மாள் மூன்றாம் பரிசாக ரூ.2,000 பெற்றனா்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.

அப்போது, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் முனைவா் ப.நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT