சிவகங்கை

தேவகோட்டை நகராட்சியில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியில் உரிய வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தேவகோட்டை பேருந்து நிலையம், வாடியாா் வீதி, பழனியப்பன் சந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான 128 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நடப்பாண்டு வரை வாடகை பாக்கி மட்டும் ரூ. 3 கோடி நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக நகராட்சி அலுவலா்கள் கடை நடத்தும் சம்பந்தப்பட்ட நபா்களிடம் வாடகை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனா். ஆனால் அவா்கள் வாடகை பாக்கியை செலுத்தவில்லையாம்.

இதனால் தேவகோட்டை நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவின் பேரில் மேலாளா் தனலெட்சுமி, வருவாய் ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் பேருந்து நிலையம் அருகே உள்ள 10 கடைகளை மூடி ‘சீல்’ வைத்தனா்.

மேலும் இம்மாத இறுதிக்குள் வாடகை பாக்கியை செலுத்தினால் மட்டுமே கடை திறக்க அனுமதிக்கப்படும். தவறும் பட்சத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மறு ஏலம் விடப்படும் என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT