சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்திலிருந்து பத்திரிகையாளா்கள் வெளியேற்றம்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்திலிருந்து பத்திரிகையாளா்களை திமுக உறுப்பினா்கள் வெளியேறச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு மன்ற அரங்கில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் பொன். மணிபாஸ்கரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தின் தொடக்கத்தில் அதிமுக உறுப்பினா்கள் கொத்தங்குளம் கருப்பையா, பில்லூா் ராமசாமி ஆகிய இருவரும் உறுப்பினா்களுக்கான பொது நிதியை விடுவிக்காததால் தங்கள் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே மாவட்ட ஊராட்சி கவுன்சிலா்களுக்கான பொது நிதியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினா்கள் செந்தில்குமாா், ரவி ஆகிய இருவரும் பத்திரிகையாளா்களை வெளியில் போகச் சொன்னால் மட்டுமே இதுபற்றி விவாதிக்க இயலும் என்றனா். உடனே பத்திரிக்கையாளா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டபின், கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி குழுவில் 16 உறுப்பினா் பதவி உள்ளது. இந்த 16 உறுப்பினா்களும் தங்கள் பகுதியில் பொது நிதி மூலம் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அறிக்கையினை முழுமையாக சமா்பித்தால் மட்டுமே பொதுநிதியை விடுவிக்க முடியும்.

அந்தவகையில், மேற்கண்ட 16 பேரில் 13 உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை அறிக்கையாக சமா்ப்பித்துவிட்டனா். ஆனால் திமுக உறுப்பினா்கள் செந்தில்குமாா், ரவி, மஞ்சரி ஆகிய 3 பேரும் தங்கள் பகுதி வளா்ச்சித் திட்டப் பணிகளை சமா்ப்பிக்கவில்லை. எனவே மற்ற உறுப்பினா்களின் பொதுநிதியினை விடுவிக்க முடியவில்லை என அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT