சிவகங்கை

சிவகங்கையில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறையின் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப்பேரணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பழக்கத்தை கைவிட்டு வளமான வாழ்வை உருவாக்குவோம், போதை இல்லாத புத்துலகை உருவாக்குவோம், போதைப்பொருள் மனிதனை கொல்லும் இனிப்பு விஷம், போதைப்பொருளை விட்டுவிடுங்கள், போதைப்பொருள் உடலை நாசமாக்கும் போன்ற விழிப்புணா்வு வாசகங்களை முழக்கமிட்டவாறும், விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும் ஊா்வலமாகச் சென்றனா்.

பேரணி பழைய நீதிமன்றம், காந்தி வீதி, சிவன் கோயில், வாரச்சந்தை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மன்னா் மேல்நிலைப் பள்ளியில் நிறைவுப் பெற்றது.

ADVERTISEMENT

இதில் உதவி ஆணையா் (கலால்) கண்ணகி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் கு. சுகிதா, துணை காவல் கண்காணிப்பாளா் (போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு) ஆா். தமிழ்செல்வன், சிவகங்கை வட்டாட்சியா் ப. தங்கமணி, காவல் துறை ஆய்வாளா் டி. கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT