சிவகங்கை

அமராவதிபுதூா், ஆறாவயல் பகுதிகளில் இன்று மின்தடை

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூா், ஆறாவயல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அமராவதிபுதூா், தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ), தேவகோட்டை சாலை, சங்கராபுரம், ஆறாவயல், தானா வயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாலயன்கோட்டை, எஸ்.ஆா். பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, சிஐஎஸ்எப் வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று காரைக்குடி மின்கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

கல்லில் நாளை மின்தடை:

கல்லல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கல்லல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, அரண்மனை சிறுவயல், வெற்றியூா், சாத்தரசம்பட்டி, பாகனேரி, நடராஜ புரம், பனங்குடி, கண்டிப்பட்டி, கெளரிப்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, வெங்கட்ராமபுரம், கீழக்கோட்டை,தேவப் பட்டு, சொக்கநாதபுரம் ஆகிய கிராமங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பரமக்குடி: பரமக்குடி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 29) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கமுதக்குடி, தெளிச்சாத்தநல்லூா், சுந்தனேந்தல், பொதுவக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அன்றைய தினம் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. கங்காதரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT