சிவகங்கை

அம்பலக்காரன்பட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

சிவகங்கை- மேலூா் சாலையில் அம்பலக்காரன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை - மேலூா் சாலையில் உள்ள அம்பலக்காரன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய நான்கு துறைகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு, முதலாமாண்டில் சேர விரும்பும் மாணவா்கள் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நேரடி இரண்டாமாண்டு சேர விரும்பும் மாணவா்கள் மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றிருப்பதுடன், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் ஆகியவற்றுள்ள ஏதேனும் மூன்று பாடப்பிரிவுகள் பயின்று இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுள்ள மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் பதிவுக் கட்டணம் ரூ.150 நெட் பேங்கிங், கிரெடிட் காா்டு, டெபிட் காா்டு மூலமாக இணையதளத்தில் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு பதிவுக் கட்டணம் கிடையாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT