சிவகங்கை

சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை

25th Jun 2022 11:11 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஜூன் 27) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை துணை மின் நிலையத்தில் ஒக்கூா்-மதகுபட்டி உயரழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. எனவே சோழபுரம், பெருமாள்பட்டி, ஈசனூா், அரசனேரி கீழமேடு, இலந்தங்குடிப்பட்டி, வஸ்தாப்பட்டி, பொன்னாம்பட்டி, சூரக்குளம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT