சிவகங்கை

மானாமதுரை அருகே விஷம் குடித்த தம்பதி: கணவா் பலி

25th Jun 2022 11:11 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கணவன் உயிரிழந்தாா்.

நவத்தாவு கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மனைவி முத்துமாரி. இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா். குடும்ப வறுமை காரணமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு கூலி வேலைக்குச் சென்ற தம்பதி அங்கு மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் பொள்ளாச்சியிலிருந்து இருவரும் சொந்த ஊரான நவத்தாவு கிராமத்திற்கு வந்தனா். வெள்ளிக்கிழமை இருவரும் அங்கு உள்ள கண்மாய்க்கரை பகுதிக்குச் சென்று மதுவில் எலி மருந்தைக் கலந்து குடித்ததாகக் கூறப்படுகிறது.

கிராமத்தினா் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தாா். முத்துமாரி தொடா்ந்து சிகிச்சையில் உள்ளாா். இச்சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT