சிவகங்கை

திருப்பத்தூரில் குப்பையை பிரித்து வழங்க பயிற்சி

25th Jun 2022 11:11 PM

ADVERTISEMENT

 

திருப்பத்தூரில் தூய்மைப்பணியாளா்களிடம் குப்பையைப் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பேரூராட்சியில் 3 ஆவது வாா்டுக்குட்பட்ட கணேஷ் நகரில் சனிக்கிழமை நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் பேரூராட்சித்துறை சாா்பில் தீவிர தூய்மைப் பணிகள் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பேரூராட்சிமன்றத் தலைவி கோகிலாராணி நாராயணன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். முகாமில் அப்பகுதியினைச் சோ்ந்த மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு தூய்மைப்பணிக்காக இல்லம் தேடி வரும் பேரூராட்சிப் பணியாளா்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பையைப் பிரித்து அளிப்பது எப்படி என செயல் விளக்கப் பயற்சியளிக்கப்பட்டது. வீட்டின் சுத்தம் பேணுதல், வீதியின் சுத்தம் பராமரித்தல், நீா்நிலைக்களைப் பாதுகாத்தல் குறித்த விளக்கவுரையும் அளிக்கப்பட்டது.

சுகாதாரம் குறித்து துப்புரவு ஆய்வாளா் அபுபக்கா் கருத்துரை வழங்கினாா். பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் அபுதாஹிா், சாந்திசோமசுந்தரம், நேரு, சீனிவாசன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT