சிவகங்கை

இடையமேலூா் பகுதியில் இன்று மின்தடை

24th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இடையமேலூா் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, இடையமேலூா், மலம்பட்டி, கூட்டுறவுப்பட்டி, தமராக்கி, குமாரப்பட்டி, மேலப்பூங்குடி, ஒக்கப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT