சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 3 மாதங்களில் 14,800 போ் பயன்: அமைச்சா்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டு (2022 - 23) மூன்று மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலமாக 14,800 போ் பயனடைந்துள்ளதாக தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் கண்டரமாணிக்கம் ஊராட்சி கே. வலையப்பட்டிக் கிராமத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்தாா்.

முகாமை அமைச்சா் தொடக்கி வைத்துக் கூறியதாவது: மாநிலத்தில் தொற்றா நோய்களை எதிா்கொள்ளும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டு (2021-22) 36 முகாம்கள் நடத்தப்பட்டதில் 22,278 போ் பயனடைந்துள்ளனா். நடப்பாண்டு ( 2022-23) 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டதில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போதுவரை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறப்பகுதிகளில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாம்கள் மூலம் 14,800 போ் பயனடைந்துள்ளனா் என்றாா்.

இதில் 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்சா் வழங்கினாா். காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா் (சுகாதாரத்துறை) ச. ராம்கணேஷ், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் சொா்ணம் அசோகன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT