பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிவகங்கை மாவட்டத்தில் 93.62 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூா் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், கடந்த மே மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வினை 8,940 மாணவா்கள், 8,724 மாணவிகள் என மொத்தம் 17,664 போ் எழுதினா். இந்நிலையில், தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், 8,110 மாணவா்கள், 8,427 மாணவிகள் என மொத்தம் 16,537 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதையடுத்து, 93.62 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் 6 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.