சிவகங்கை அருகே தமராக்கி தெற்கு கிராமத்தில் சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்புகைப்படக் கண்காட்சியில் தமிழக அரசின் செயலாக்கத் திட்டத்தின் கீழ் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன.
மேலும், இக்கண்காட்சியில் அரசின் திட்டங்கள் குறித்தும், அரசின் நலத் திட்டங்களைப் பயனாளிகள் எவ்வாறு பெறுவது என்பது குறித்தும், யாரை அணுகி பெற வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களால் விளக்கம் அளிக்கப்பட்டன.