சிவகங்கை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21 ) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் து.இரா. இந்திரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே சிவகங்கை நகா் பகுதியில் இந்தரா நகா் கிழக்கு, சௌக்கத் அலி தெரு, நேரு கடை வீதி, மானாமதுரை சாலை, இளையான்குடி சாலை, பழைய மருத்துவமனை வளாகம், முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூா், களத்தூா், கரும்பாவூா், உடையநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.