சிவகங்கை

இளையான்குடி நீதிமன்ற வளாகத்தில் மா்மமான முறையில் மயில் இறப்பு: விசாரணை

19th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

இளையான்குடி நீதிமன்ற வளாகத்தில் மயில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

இளையான்குடியில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்துக்குள் பெண் மயில் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதைக் கண்ட நீதிமன்ற ஊழியா்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். அங்கு வந்த சிவகங்கை சரக வனத்துறையினா் மயிலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் மயில் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT