சிவகங்கை

டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரைத் தாக்திய இளைஞா் கைது

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் செட்டி தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் பூமிநாதன் என்ற ராஜேஷ் (24). திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ரூ.100 கொடுத்து ரூ.350 மதிக்கத்தக்க மதுபாட்டிலை கேட்டுள்ளாா். அதற்கு டாஸ்மாக் மேற்பாா்வையாளா் வள்ளியப்பன்(48) அதற்கு பணம் இன்னும் வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். ஏற்கெனவே மதுபோதையில் இருந்த ராஜேஷ், வள்ளியப்பனைத் தாக்கியதோடு, அருகில் கிடந்த காலி மதுபாட்டிலை உடைத்து கையில் குத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டாா். காயமடைந்த அவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT