திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் பிரபந்தம். ந.சோ.பெரி.சீனியம்மாள் அறக்கட்டளை சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் முகாமைத் தொடக்கி வைத்து, மாற்றுத்திறனாளியான மணிகண்டனுக்கு தானியங்கி மூன்று சக்கர வாகனத்தை வழங்கினாா்.
இம்முாகமில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பல்துறை மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா். இருதயம், உயா் ரத்த அழுத்தம், கண், பல், நரம்பு போன்ற பல்வேறு நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரபந்தம் ந.சோ.பெரி.சீனியம்மாள் அறக்கட்டளை நிறுவனா் சிதம்பரபாரதி, மதுரை சுழற்சங்கத் தலைவா் செழியன், பி.இளவரசன், எஸ்.குமரன், எம்.நாகராஜன், சா.சோமசுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டனா். முடிவில் எம்.நாகராஜன் நன்றி கூறினாா்.