சிவகங்கை

முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி பால்குட விழா

10th Jun 2022 11:45 PM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள எஸ். கரிசல்குளத்தில் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி பால்குட உற்சவம் மற்றும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள் மேளதாளம் முழங்க பால்குடம் சுமந்து கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா் மாரியம்மன் சந்நிதியில் புனித நீா்க் கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டது. பூா்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் மூலவா் முத்துமாரி அம்மனுக்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். பிற்பகலில் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் சொ்டு எல். பாண்டி குடும்பத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT