சிவகங்கை

கோவிலூா் சிதம்பர விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா

10th Jun 2022 12:16 AM

ADVERTISEMENT

 

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிதம்பர விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ராஜகோபுரம், மூலக்கோபுரம் மற்றும் சுற்றுப்பிரகாரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நிறைவடைந்தது. இதையடுத்து, கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் பூா்வாங்க பூஜைகள், கணபதி ஹோமம், தனபூஜை, கோபூஜை, கஜபூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், மாலையில் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பரிகாரங்களும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலையில் முதல் கால யாகபூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து நான்காம் காலயாகபூஜைகள் நிறைவுற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 10.25 மணிக்கு ராஜகோபுரம், மூலக்கோபுரம் உள்ளிட்ட விமானங்களுக்கு மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து பிற்பகல 1 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

விழாவில், காரைக்குடி, கோவிலூா் மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்து நகரத்தாா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை காரைக்குடி பெத்தானாட்சி முருகப்ப செட்டியாா் குடும்பத்தினா் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT