திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை சோமலெ நினைவு கிளை நூலகத்தில் வியாழக்கிழமை கோடை முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
இங்கு மே 16 முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெற்ற கோடை முகாமில் நெற்குப்பை பேரூராட்சியை சுற்றியுள்ள வடுகபட்டி, கொண்ணத்தான்பட்டி கிராமப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். கணினிப் பயிற்சி மற்றும் ஓவியம், பொது அறிவுக் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
கோடை முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் பொசலான் மற்றும் முனைவா் சோமலெ சோமசுந்தரம் ஆகியோா் பரிசும், சான்றிதழும் வழங்கினா். முன்னதாக நெற்குப்பை பேரூராட்சி சாா்பாக 29 நூல்கள் நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. விழா முடிவில் நூலகா் செ.கண்ணன் நன்றி கூறினாா்.
ADVERTISEMENT