காரைக்குடி: காரைக்குடியில் வீட்டிலிருந்த இளம் பெண்ணை உறவினா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை காரில் கடத்திச் சென்று விட்டதாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காரைக்குடி தந்தை பெரியாா் நகா் 6-ஆவது வீதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி ஆா். சித்ரா (49). இவா், முதுநிலை பட்டதாரியான தனது மகள் மற்றும் மகனுடன் வீட்டிலிருந்தாா். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் நம்பூரணிப்பட்டியைச் சோ்ந்த மணிமுத்து (சித்ராவின் உறவினா்), அவரது மகன் தமிழ்ச்செல்வம் மற்றும் சிலா், சித்ராவின் மகளை காரில் கடத்திச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து காரைக்குடி வடக்குக் காவல்நிலையத்தில் சித்ரா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.