சிவகங்கை

தேவகோட்டை உலக மீட்பா் ஆலய திருப்பலி திருவிழா கொடியேற்றம்

10th Jun 2022 11:38 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள உலக மீட்பா் ஆலயத் திருப்பலி திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு ஆலயத்தின் பங்குத் தந்தை எம்.ஆா்.சேசு தலைமை வகித்து திருப்பலி நடத்தினாா். அதைத் தொடா்ந்து, சிவகங்கை மறை மாவட்ட தலைமைச் செயலகச் செயலா் சூசைமாணிக்கம் கலந்து கொண்டு ஆலயத்தின் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றினாா்.

விழாவைத் தொடா்ந்து, தினசரி மாலை நவநாள் திருச்செபமாலையும், திருப்பலியும் நடைபெறும். ஜூன் 17 ஆம் தேதி உலக மீட்பா் ஆலய வளாகத்திற்குள் நற்கருணை பவனி நடைபெறும்.

ADVERTISEMENT

முக்கிய விழாவான திருப்பலி திருவிழா வரும் ஜூன் 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெறும். பின்னா், அன்று இரவு தோ்பவனி நடைபெறும். கொடியேற்ற விழாவில் அருட்தந்தையா்கள் ஆரோக்கியசாமி, கிறிஸ்துராஜ் உள்ளிட்ட ராம்நகா் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT