சிவகங்கை: சிவகங்கையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்களின் படத் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் தி. பக்கிரிசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: சிவகங்கை வாரச் சந்தை சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் 49 நடுகற்களின் படத் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த நடுகற்கள் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி. பி 19 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைச் சோ்ந்தவை.
நடுகற்களின் காலம், எங்கு கண்டெடுக்கப்பட்டவை, அதிலுள்ள செய்தி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. இப்படத் தொகுப்பினை விடுமுறை நாள்கள் தவிர வரும் ஜூன் 19 ஆம் தேதி வரை பொதுமக்கள் பாா்வையிடலாம் என்றாா்.