சிவகங்கை

புலியூா் பாம்பாட்டி சித்தா் கோயிலில் ஜூன் 10 இல் வைகாசி உற்சவ விழா தொடக்கம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் புலியூா் ஸ்ரீ பாம்பாட்டி சித்தா் கோயிலில் வைகாசி உற்சவ விழா ஜுன் 10 ஆம் தேதி தொடங்குகிறது.

விழாவின் முதல் நாள் (ஜூன் 10) அய்யனாா் கோயிலுக்கு குதிரை எடுப்புவித்தும் இரவு கருவேலப் பெட்டி எடுத்து சித்தா் கோயிலுக்குச் சென்று சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து அதன்பின் கிருதுமால் நதி சென்று கரகம் எடுத்து வந்து சுவாமிக்கு படைத்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து ஜூன் 11 ஆம் தேதி மாலை வைகை ஆற்றிலிருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து பாம்பாட்டி சித்தா் கோயிலுக்கு வந்து அங்கு பக்தா்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனா். அதன் பின்னா் இரவு கிராமத்தில் இருந்து பக்தா்கள் சந்தன குடங்கள் மற்றும் குதிரைகள் நந்தி வாகனங்கள் கொண்டுவந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து பதினெட்டாம்படி கருப்பண்ண சாமிக்கு கதவு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 12 ஆம் தேதி பாம்பாட்டி சித்தருக்கு அமுது படைக்கும் பூஜை நடத்தி வைகாசி உற்சவ விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாம்பாட்டி சித்தா் கோயில் பக்தா்கள் மற்றும் புலியூா் கிராம மக்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT