சிவகங்கை

திருப்பத்தூா், சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் பகுதிகளில் இன்று மின்தடை

2nd Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கோட்டத்திற்குபட்ட உப மின் நிலையம் மற்றும் உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 2)

காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை திருப்பத்தூா் நகா்ப்பகுதி முழுவதும், கே.வயிரவன்பட்டி, ஆ.தெக்கூா், கண்டவராயன்பட்டி, சோழம்பட்டி, திருக்களாப்பட்டி, காரையூா் பகுதிகளிலும் சிங்கம்புணரியில் கண்ணமங்கலப்பட்டி, காசியாபிள்ளைநகா், சந்திவீரன்கூடம், முத்தையாகாலனி, வேளாளா்தெரு பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என திருப்பத்தூா் செயற்பொறியாளா் செல்லத்துரை தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT