சிவகங்கை

கண்ணுடைய நாயகியம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 4 இல் தொடக்கம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோயில் வைகாசித் திருவிழா வரும் ஜூன் 4 -இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயிலில் வைகாசித் திருவிழா 10 நாள்கள் நடைபெறும். அம்மன் தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ரிஷபம், சிம்மம், காமதேனு, யானை, பூதம் உள்ளிட்ட வாகனங்களில் எழுத்தருளி விதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

முக்கிய விழாவான தங்க ரதம் புறப்பாடு ஜூன் 10 ஆம் தேதியும், களியாட்ட திருவிழா ஜூன் 11 ஆம் தேதியும், தேரோட்டம் ஜூன் 12 ஆம் தேதியும் நடைபெறும். ஜூன் 14 ஆம் தேதி உற்சவ சாந்திக்கு பின்னா் திருவிழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளா் பி. இளங்கோ, சரக கண்காணிப்பாளா் பி. சரவணகணேசன் உள்ளிட்ட அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT