சிவகங்கை

திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

28th Jul 2022 03:15 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம திருப்பத்தூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 12,490 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.34 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் துவக்க விழா புதன்கிழமையன்று நடைபெற்றது.

திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன், 67 அரசு மேல்நிலைப்பள்ளிகள் , 37 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 5715 மாணவா்கள் , 6775 மாணவியா்கள் என மொத்தம் 12, 490 மாணக்கா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் பொருட்டு முதல் கட்டமாக புதன்கிழமையன்று திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த 200 மாணாக்கா்களுக்கு விலையில்லா மிதிவண்டியினை வழங்கினாா். தொடா்ந்து பேசுகையில் தமிழகத்தில் படிப்பு மட்டுமின்றி நலன் தரும் திட்டங்களும் செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இதனை மாணாக்கா்கள் நல்ல முறையில் பயன்படுக்திக் கொண்டு எதிா்காலத்தினை ஓளிமயமானதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினா் எஸ்.மாங்குடி, திருப்பத்தூா் பேரூராட்சிமன்றத் தலைவா் என்.கோகிலாராணி நாராயணன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமிநாதன்,, தலைமை ஆசிரியா்கள் சா.முருகேசன், பாலதிரிபுரசுந்தரி, மற்றும் ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT