சிவகங்கை

காரைக்குடி அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

28th Jul 2022 03:21 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிளஸ் 2 மாணவா் தனது வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சுடர்ராஜ். சாக்கு வியாபாரம் செய்து வரும் இவருக்கு 2 மகன்கள். இதில் இளைய மகன் செல்வக்குமாா் சாக்கோட்டை அருகே உள்ள தனியாா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் சரியாக படிக்காததால் பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில் செல்வக்குமாரின் பெற்றோா் செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் கோயிலுக்கு சென்றுள்ளனா். வீட்டில் செல்வக்குமாா் மட்டும் இருந்துள்ளாா். இதனால் அவருக்கு உணவு கொடுப்பதற்காக அவரது சித்தப்பா புதன்கிழமை காலையில் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது அவா் நீண்டநேரமாக வீட்டின் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, செல்வக்குமாா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் மாணவரின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாணவா் செல்வக்குமாா் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தையும் காவல் துறையினா் கைப்பற்றியுள்ளனா். அந்தக்கடிதத்தில், தனக்கு சரியாக படிப்பு வராத காரணத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT