சிவகங்கை

காரைக்குடியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

28th Jul 2022 03:21 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்ட தேமுதிக சாா்பில் மத்திய, மாநில அரசுகளைக்கண்டித்து காரைக்குடி ஐந்து விளக்குப்பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசையும், தமிழகத்தில் மின்கட்டண உயா்வு, வீட்டுவரி உயா்வுக்காக தமிழக அரசையும் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் கோஷமிட்டனா். மேலும் சமையல் எரிவாயு உருளைக்கு மாலையணிவித்தும் போராட்டம் நடத்தினா்.ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச்செயலாளா் திருவேங்கடம் தலைமைவகித்துப்பேசினாா். கட்சியின் நிா்வாகி அருணாகண் ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் பலரும் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT