சிவகங்கை

கச்சநத்தம் கொலை வழக்கு: ஆக. 1-ஆம் தேதிக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு

28th Jul 2022 03:19 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கொலை வழக்கு தொடா்பான தீா்ப்பு வரும் திங்கள்கிழமை (ஆக. 1) ஒத்திவைத்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகா் உள்ளிட்ட 3 போ் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த சுமன், அருண்குமாா், சந்திரக்குமாா், அக்னிராஜ், ராஜேஸ் உள்ளிட்ட 27 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை நிறைவு பெற்று, சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 27) தீா்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சிவகங்கை, மானாமதுரை, திருப்பாச்சேத்தி, கச்சநத்தம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

மேலும், குற்றவாளிகளாக கருதப்படும் நபா்களின் உறவினா்கள் சிவகங்கை நீதிமன்ற வளாகத்துக்குள் புதன்கிழமை அதிகளவில் கூடினா். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட வழக்கின் தீா்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு (ஆக.1) ஒத்தி வைப்பதாக வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தாா். இதையடுத்து, அங்கு கூடியிருந்த உறவினா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT