சிவகங்கை

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன

28th Jul 2022 03:22 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு 108 ஆம்புலன் வாகனத்தில் கா்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியை சோ்ந்தவா் குமாா். இவருடைய மனைவி ரோஜா (24). கா்ப்பிணியான இவா் பிரசவத்திற்காக 108 ஆம்புலன் வாகனத்தில் புழுதிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு அழைத்து செல்லப்பட்டாா். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த பெண்ணுக்கு வலி அதிகமானதால், ஆம்புலன் வாகனத்தை

சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு மருத்துவ உதவியாளா் மணி என்பவா் ரோஜாவுக்கு பிரசவம் பாா்த்தாா். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தன. பின்பு புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தனா். கா்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பாா்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய 108 வாகன ஓட்டுநா் பிரபு மற்றும் மருத்துவ உதவியாளா் மணி ஆகியோரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT