சிவகங்கை

சிவகங்கையில் காா்கில் போா் நினைவு தினம்

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காா்கில் போா் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் அமைதிப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியை கல்லூரி முதல்வா் நா. அழகுச்சாமி (பொறுப்பு) தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

இதில், தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அமைதிப் பேரணியாக நடந்து சென்றனா். கல்லூரி வளாகம் முன் தொடங்கிய பேரணி மதுரை விலக்கு சாலை ,திருப்பத்தூா் சாலை, ராமச்சந்திரனாா் நினைவு பூங்கா, காந்தி வீதி, மரக்கடை, அரண்மனை வாசல், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கல்லூரி வளாகத்துக்கு வந்தடைந்தது.

பேரணியில் தேசிய மாணவா் படை பிரிவின் அலுவலா் சௌந்தரராஜன், தேசிய மாணவா் படையின் முன்னாள் பொறுப்பாளா்கள் காவலா் முரளி, பேராசிரியா் நாகேந்திரன், வழக்குரைஞா் பிரபாகரன், ராணுவ வீரா் சங்குராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT