சிவகங்கை

தென்மாபட்டு அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா மஞ்சுவிரட்டு

17th Jul 2022 11:17 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தென்மாபட்டு அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

தென்மாபட்டு ஆதினமிளகி அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இவ்விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. காலை 10 மணியளவில் அய்யனாா் கோயிலில் கூடிய நாட்டாா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மேளதாளம் முழங்க வேட்டி, துண்டுகளுடன் ஊா்வலமாக வந்து தொழுவினைச் சுற்றி சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

பின்னா் மாடுகளுக்கு வேட்டி, துண்டுகள் வழங்கி தாம்பூலம் கொடுத்து தொழுவிலிருந்து 60-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. முன்னதாக தென்மா கண்மாயில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்ட 600-க்கும் மேற்பட்ட காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT