சிவகங்கை

சிவகங்கையில் வரும் ஜூலை 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

17th Jul 2022 11:18 PM

ADVERTISEMENT

சிவகங்கையில் வரும் ஜூலை 22-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் இம்மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடா்பாக புகாா் அளித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT