சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 24 ஊராட்சிகள் மாதிரி கிராமமாக தோ்வு

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் 24 ஊராட்சிகள் மாதிரி கிராமமாக தோ்வு செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : அனைத்து நிலைகளிலும் தன்னிறைவு கொண்டதாகவும், அனைத்து அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய ஊராட்சி, மாதிரி ஊராட்சியாக தோ்வு செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் 24 கிராம ஊராட்சிகள் மாதிரி கிராமமாக தோ்வு செய்யப்பட்டு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை ஒன்றியத்தில் பிரவலூா், மலம்பட்டி, காளையாா்கோவில் ஒன்றியத்தில் காடனேரி, பள்ளித்தம்பம், மானாமதுரை ஒன்றியத்தில் பெரும்பச்சேரி, கிழமேல்குடி, இளையான்குடி ஒன்றியத்தில் மருதங்கநல்லூா், சாத்தனூா், திருப்புவனம் ஒன்றியத்தில் மணலூா், சொட்டதட்டி, தேவகோட்டை ஒன்றியத்தில் சண்முகநாதபுரம், கிளியூா், கல்லல் ஒன்றியத்தில் நரியங்குடி, தட்டட்டி, கண்ணங்குடி ஒன்றியத்தில் தத்தனி, கொடுவூா், சாக்கோட்டை ஒன்றியத்தில் பி.முத்துப்பட்டினம், வடகுடி, திருப்பத்தூா் ஒன்றியத்தில் கீழச்சிவல்பட்டி, கே.வைரவன்பட்டி, சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஜெயங்கொண்ட நிலை, வையாபுரிபட்டி, எஸ்.புதூா் ஒன்றியத்தில் பிரான்பட்டி, கரிசல்பட்டி ஆகிய 24 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட ஊராட்சிகளில் திட மற்றும் திரவக்கழிவுகள் தேங்காத வண்ணம் தூய்மையான கிராமமாக உருவாக்கிட, வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக மேலாண்மை செய்திட வீட்டுத்தோட்டங்கள் அமைத்தல், தனிநபா் மற்றும் சமுதாய உறிஞ்சுக்குழிகள் ஏற்படுத்துதல், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை வாய்க்காலுடன் இணைத்தல், கழிவுநீா் வாய்க்காலிலிருந்து நீா் கால்வாய்களில் கழிவுநீராக கலக்காமல் செங்குத்து உறிஞ்சு குழி அமைத்து வடிகட்டி தெளிந்த நீராக மாற்றி கால்வாய்க்கு கொண்டு செல்லுதல், மழைநீா் சேகரிப்புத் தொட்டி ஏற்படுத்தி நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், தூய்மைக் காவலா்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, உயிா் கரிம உரங்களாகவும், மண்புழு உரங்களாகவும் தயாரித்தல், நெகிழிக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அரவை இயந்திரங்கள் மூலம் துண்டுகளாக்கப்பட்டு சாலைப்பணிக்கு பயன்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

புளியங்குடி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT