சிவகங்கை

சிவபுரிபட்டி கோயிலில் உண்டியல் பணம் திருடிய 2 போ் கைது

7th Jul 2022 02:32 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிபட்டி கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட தா்மஷம் வா்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து கோயில் கண்காணிப்பாளா் தண்ணாயிரம் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் கோயிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் மா்ம நபா்கள் நடமாட்டம் பதிவாகி இருந்தது. இது தொடா்பாக சிங்கம்புணரி வடக்கு வேளாா் தெருவை சோ்ந்த கவின் (21), அவரது நண்பா் சேதுபதி (21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT