சிவகங்கை

சிவகங்கையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அபராதம் விதிப்பு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை நகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சிவகங்கையில் ரயில் நிலையம், உழவா் சந்தை பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிலா் ஆக்கிரமிப்பு செய்து மீன் மற்றும் காய்கனி கடைகள் நடத்தி வருவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரைஆனந்த், சிவகங்கை நகராட்சி ஆணையா் பாஸ்கரன், உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணகுமாா், நகா் அமைப்பு அலுவலா் திலகவதி உள்ளிட்ட அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த மீன் மற்றும் காய்கனி கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு நகராட்சிப் பணியாளா்கள் அகற்றினா். சிவகங்கை நகா் வ. உ. சி தெருவில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த பழைய இரும்புக் கடை அகற்றப்பட்டு, ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிவன் கோயில் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த பழைய இரும்புக் கடையை அதிகாரிகள் அகற்றி, கடை நடத்திய நபருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT