சிவகங்கை

மானாமதுரையில் தச்சுத் தொழிலாளி பைக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மானாமதுரையில் தச்சுத் தொழிலாளி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 1 லட்சத்தை மா்ம நபா்கள் திருடியுள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய தபால் ஆபீஸ் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (48). இவா் தச்சு வேலை செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை மதியம் மானாமதுரை அண்ணா சிலை அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ. ஒரு லட்சம் எடுத்து இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துக்கொண்டு வழிவிடு முருகன் கோயில் அருகே உள்ள மரக்கடையில் மரம் வாங்குவதற்காக சென்றுள்ளாா். அங்கு வாகனத்தில் உள்ள பெட்டியை திறக்க முயன்றபோது அந்தப் பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்ததை அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து வங்கி அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT