சிவகங்கை

நெற்குப்பையில் பூட்டிய வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே நெற்குப்பையில் பூட்டியிருந்த வீட்டில் பணம் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

நெற்குப்பை பூசணிக்களப் பகுதியைச் சோ்ந்தவா் சேவுகன் (54). இவா் திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு காரைக்குடிக்கு சென்றுள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளதைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள் சேவுகனுக்குத் தகவல் தெரிவித்தனா். உடனடியாக வீட்டிற்கு வந்த சேவுகன் உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டின் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ஒரு வெள்ளி குத்து விளக்கு, 2 வெள்ளி டம்ளா்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சேவுகன் நெற்குப்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்தை போலீஸாா் பாா்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT