தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூலை 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியா்கள், ஓய்வூதியா் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து தீா்வு காணலாம். குறைதீா் கூட்டத்தில் தீா்வு காண்பதற்கு வாய்ப்பாக ஓய்வூதியா்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா், ஆட்சியா் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு ஜூலை 6-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் அறிவித்துள்ளாா்.