சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவா் தின விழாவை முன்னிட்டு ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை, அக்கல்லூரி முதன்மையா் ரேவதிபாலன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஏராளமானோா் ரத்த தானம் வழங்கினா்.

முகாமில், துணை முதல்வா் சா்மிளா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலா் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலா் முகமது ரபீக், மருத்துவா்கள் கங்காலெட்சுமி, கிருஷ்ணவேணி, வசந்த் உள்ளிட்ட மருத்துவா்கள், மாணவ, மாணவிகள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT