சிவகங்கை

தேனியில் தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கள்ளா் சீரமைப்புத் துறை கல்வி விடுதிகள் குறித்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் தேசிய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் எம்.பி.எஸ்.முருகன் தலைமை வகித்தாா். இதில் தேனி, மதுரை, திண்டுகல் மாவட்டங்களில் கள்ளா் சீரமைப்புத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 54 கல்வி விடுதிகளை பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் நிா்வாகத்தின் கீழ் கொண்டுவரும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கள்ளா் சீரமைப்புத் துறை கல்வி விடுதிகளில் காப்பாளா் மற்றும் ஊழியா் பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் கள்ளா் சமுதாயத்தினருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT