சிவகங்கை

தேனியில் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனியில் ராணுவப் பணி ஆள் சோ்க்கைக்கான அக்னிபத் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி திங்கள்கிழமை மாணவா் அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் தமிழ்பெருமாள் தலைமை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் முனீஸ்வரன், புரட்சிகர இளைஞா் கழக மாவட்டச் செயலா் உதுமான்அலி, ஏஐஎஸ்பி தேசியக் குழு உறுப்பினா் திவாகரன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் டி. நாகராஜ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் லெனின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதரத்தை சீரழிக்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

Tags : agnipath
ADVERTISEMENT
ADVERTISEMENT