சிவகங்கை

பெரியகுளம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் இணையதளம் சீரானது

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரியகுளம் சாா்- பதிவாளா் அலுவலக இணையதளம் சீரானதையடுத்து திங்கள்கிழமை வழக்கம்போல் அலுவலகப் பணிகள் நடைபெற்றன.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மாவட்ட பதிவாளா் அலுவலகம் உள்ளது. இங்கு 1 மற்றும் 2 சாா்-பதிவாளா் அலுவலகம் உள்ளது. இங்கு பெரியகுளம் பகுதியைச் சோ்ந்தவா்கள் 1 இல் இணை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரங்களைப் பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த வெள்ளிக்கிழமை வடகரையிலுள்ள 1 இணை சாா்- பதிவாளா் அலுவலகத்தில் இணையதளம் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனா். வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்பதால் 30-க்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவுக்கு காத்திருந்தன. ஆனால் இணையதளம் பழுதடைந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனா்.

திங்கள்கிழமை வழக்கம் போல் இணையதளம் சீரானதையடுத்து , பத்திரப்பதிவுகள் தொடங்கின. மேலும் வெள்ளிக்கிழமை விடுபட்ட பத்திரங்களும் பதிவு செய்யப்பட்டன என அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT