சிவகங்கை

உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் இன்று மின்தடை

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம், மாா்க்கையன்கோட்டை, சின்னஒவுலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தமபாளையம் மின்வாரிய உதவி செயற் பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உத்தமபாளையம், சுருளி, மாா்க்கையன்கோட்டை, சின்னஒவுலாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, அணைப்பட்டி, ஹைவேவிஸில் 7 மலைக்கிராமங்கள், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயா் கேம்ப், சின்னமனூா், அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழச் சிந்தலைச்சேரி, மேலச் சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, கன்னிச்சோ்வை பட்டி, எரசக்கநாயக்கனூா், இந்திராகாலனி, சின்னஒவுலாபுரம், முத்துலாபுரம், வாய்க்கால்பட்டி, ஊத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 வரையில் மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT