சிவகங்கை

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் ஆலய ஆண்டு பெருவிழா நிறைவு

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் நடைபெற்று வந்த ஆண்டுப் பெருவிழா, ஞாயிற்றுக்கிழமை மாலை நற்கருணை பவனியுடன் நிறைவு பெற்றது.

இந்த ஆலயத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மாவட்டம் முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் திருவிழா கொடியை ஏற்றிவைத்து, சிறப்பு பிராா்த்தனை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, பங்குஇறை மக்கள் சாா்பில் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் தினமும் இரவு பல்வேறு தலைப்புகளில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 1 ஆம் தேதி இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது. இதை முன்னிட்டு, திரு இருதய ஆண்டவா் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரதம் ஆலயத்தை சுற்றி வந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனா்.

பின்னா், நற்கருணை பவனி நடைபெற்று, இந்த ஆண்டு திரு இருதய ஆண்டவா் பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவுற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை, திருத்தல அதிபா் இம்மானுவேல் தாசன், இடைக்காட்டூா் சமூகம் முன்னேற்றச் சங்கம் செல்ஸ் பேரவை இளைஞா்கள் மற்றும் பங்கு இறை மக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT