சிவகங்கை

ஒக்கூா் கோயிலில் உண்டியல் பணம், நகை திருட்டு

2nd Jul 2022 10:58 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை அருகே ஒக்கூரில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து பணத்தையும், சுவாமி சிலையிலிருந்த நகையையும் திருடியுள்ளனா்.

இக்கோயில் வழியாக சனிக்கிழமை காலையில் சென்ற சிலா் கோயில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்து மதகுபட்டி போலீஸாா் மற்றும் கோயில் நிா்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அங்கு வந்த நிா்வாகத்தினா் மற்றும் போலீஸாா் உள்ளே சென்று பாா்த்தபோது உண்டியலில் இருந்த பணம், அம்மன் கழுத்திலிருந்த 3 கிராம் தங்கத் தாலி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT